14:42 06-11-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்கார் படத்தின் HD Print இன்றே இணையதளத்தில் வெளியாகும் என Tamil Rockers மீண்டும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தற்போது படத்தின் பதிப்பினை இணையத்தில் வெளியிட்டுள்ளது!




ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளி திருநாளான இன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் HD Print-னை இன்றே வெளியிட்டு நாள் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என Tamil Rockers தெரிவித்துள்ளது.



முன்னதாக இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இத்ம மனுவில், 3,710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிடவும் நிரந்தர தடை விதித்த உத்தரவிட்டார். 


இந்த உத்தரவினை அடுத்து பிரபல திரைப்பட வெளியிட்டு இணையதளமான Tamil Rockers படத்தின் வெளியிட்டு நாளான இன்றே இப்படத்தினை வெளியிடுவோம் என சவால் விட்டனர். இதனையடுத்து Tamil Rockers மிரட்டலை முறியடிப்போம் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. 


இந்நிலையில்.,, அனைத்து தடைகளையும் மீறி ‏சர்கார் படத்தின் HD Print இன்றே இணையதளத்தில் வெளியாகும் என Tamil Rockers மீண்டும் தெரிவித்துள்ளது. இந்த பதிவிற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.