நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இணையத்தில் விரைவில் வெளியாகும் என Tamil Rockers அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தினை சவால் விட்டு இணையத்தில் வெளியிட்ட Tamil Rockers, தற்போது நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படத்தினையும் இணையத்தில் வெளியிடுவுள்ளதாக அறிவித்துள்ளது!



இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படம் வரும் நவம்பவர் 29-ம் நாள் வெளியாகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இத்திரைப்படத்தின் வெளியீட்டினை தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையல் தற்போது இத்திரைப்படத்தினை இணையத்தில் வெளியிடவுள்ளதாக tamil Rockers அறிவித்துள்ளனர்.


முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தினை வெளியீட்டு நாள் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என சவால் விட்டு படத்தினை tamil Rockers வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது 2.0 படகுழுவினர்கும் tamil Rockers சவால் விட்டுள்ளது!