பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து தீவிரமாக விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக விவகாரத்தில் பாஜக-வை கேலி செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 


இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், "கா்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் ஆரம்பம். அரசியல் சாணக்கியங்களை கண்டு களியுங்கள்" எனக் கூறியிருந்தார்.


 



 


இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவின் படி, நேற்று கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, குமாரசாமி பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.


கர்நாடகவில் பாஜக ஆட்சியை இழந்ததால், அவர்களை கேலி செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், "கர்நாடக மாநிலம் இனி காவி மயமாக இருக்காது. வண்ணமயமாக இருக்கும். மேட்ச் ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்டது. 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒருபக்கம் காமெடியாக இருந்தாலும், இனிமே மக்கள் சேற்று இறைக்கும் அரசியலுக்கு தயாராகுங்கள். நான் மக்களின் பக்கம். தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்" எனக் கூறியுள்ளார்.