விவாகரத்திற்கு பின்பு முதன்முறையாக தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா! என்ன சொன்னார்?
Aishwarya Rajinikanth Taks About Actor Dhanush After Divorce : தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்து இத்தனை நாட்கள் கழித்து ஐஸ்வர்யா, முதன் முறையாக தனது முன்னாள் கணவர் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார். அது என்ன தெரியுமா?
Aishwarya Rajinikanth Taks About Actor Dhanush After Divorce : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், தனுஷும் இயக்குநரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, தாங்கள் விவாகரத்து பெற முடிவெடுத்து விட்டதாக இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா-தனுஷ் இருவருமே வெளியில் தங்களது பிரிவு குறித்து பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், முதன் முறையாக தனது முன்னாள் கணவர் குறித்து பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். என்ன சொன்னார் தெரியுமா?
தனுஷ் குறித்து பேசிய ஐஸ்வர்யா..
லால் சலாம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் பெரும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், படம் குறித்து ஒரு நேர்காணலில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் “நீங்கள் அறிமுகப்படுத்திய அனிருத் இப்போது இந்திய அளவில் பெரிய இடத்தில் இருக்கிறார்”என பேட்டி எடுப்பவர் கூறினார். அதற்கு ஐஸ்வர்யா, “தனுஷ்தான் அதற்கு காரணம், நான் இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அனிருத்தை அவரது பெற்றோர்கள் படிப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப இருந்ததாகவும், அவர்களின் மனதை மாற்றி தனுஷ்தான் அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்ததாகவும் கூறினார். மேலும் 3 படத்தில் அனிருத்தை இசையமைக்க வைக்க வேண்டும் என்று கூறியதும் தனுஷ்தான் என பேசினார். தற்போது அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் பேசினார்.
விவாகரத்திற்கு பிறகு முதன் முறையாக..
தனுஷ்-ஐஸ்வர்யா தங்களது பிரிவை சமூக வலைதள பக்கங்களில் அறிவித்ததில் இருந்து, இருவரும் தங்களை குறித்து எங்குமே மூச்சு கூட விடவில்லை. தனுஷ், இப்போதும் கூட எந்த பேட்டியிலும் தனது முன்னாள் மனைவி குறித்து பேசவில்லை. ஐஸ்வர்யா, இப்பாேதுதான் தனுஷின் பெயரை கேமரா முன் சொல்வே செய்கிறார். இதனால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கின்றனர்.
18 வருட திருமண வாழ்க்கை..
நடிகர் தனுஷின் வெற்றி பெற்ற முதல் படம் ‘காதல் கொண்டேன்’. இப்படம், 2003ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவின் போது சந்தித்துக்கொண்ட ஐஸ்வர்யாவும் தனுஷ், நண்பர்களாக மாறி, பின்பு அவர்களுக்குள் காதல் வளர்ந்ததாகவும் பேசப்படுகிறது. 1 வருடமாக காதலித்த இவர்கள், இரு வீட்டார் சம்மதத்துடன் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் ஆன போது இருவருமே அவர்களின் 20களில் இருந்தனர்.
தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் கோ-பேரண்டிங் முறையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வளர்த்து வருகின்றனர். இவர்கள் விவாகரத்து குறித்து அறிவித்த போது ரசிகர்கள் மனமுடைந்து போயினர்.
மேலும் படிக்க | Guess Who: ரஜினிக்கு அருகில் நிற்கும் இந்த சிறுவன் இப்போ டாப் ஹீரோ! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ