சிம்புவை இயக்கும் ஐஸ்வர்யா? டுவிஸ்ட் கொடுக்கும் தகவல்!
18 வருட காதல் திருமண வாழ்விலிருந்து விலகியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் அண்மையில் அறிவித்திருக்கும் நிலையில், தற்போது நடிகர் சிம்புவை வைத்து படம் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் சிம்பு கடந்த வருடத்தில் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு, புத்தம் புது தோற்றத்துடனும் தனது புகழ்பெற்ற ஸ்டைலுடனும் திரையுலகில் வெற்றிநடை போட்டு வருகிறார். கடந்த வருடங்களில் மாறிய இவரது தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல அன்பு காட்டி வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் விதத்தில், மெலிந்த தோற்றத்திலும் சாக்லேட்பாய் லுக்குடனும் திரும்ப வந்தார் சிம்பு.
மேலும் படிக்க | தவறவிட்ட கமல்; கச்சிதமாகக் கையிலெடுத்த சூர்யா: எதற்கும் துணிந்தவன் படம் எப்படி?
இவரது கம்-பேக் படமான மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர், சிம்புவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் ஐஸ்வர்யா தற்போது முசாபிர் எனும் மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளார்.
இதையடுத்து படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பலதரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஹிட்டுக்காக காத்திருக்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு இச்செய்தி நற்செய்தியாகவே அமைந்துள்ளது என்றும் கூறலாம்.
மேலும் படிக்க | துரத்தும் 'ஜெய்பீம்' விவகாரம்; சூர்யா செய்யப்போவது என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR