தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'ஜகமே தந்திரம்' நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இந்த படத்தை விட அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது பொன்னியின் செல்வன் படம்-1 படம் தான். பொன்னியின் செல்வன்-1 படத்தில் பூங்குழலி என்கிற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார், குந்தவை அழகா? நந்தினி அழகா? என்று ரசிகர்கள் சிலர் போட்டிபோட, பூங்குழலி தான் அழகு என்று தனி ரசிகர் கூட்டம் போட்டியில் களமிறங்கியது. அந்த படத்தில் சமுத்திரகுமாரி என்கிற இந்த பூங்குழலியை ரசிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள், அருண்மொழிவர்மன் மீது ஒருதலை காதல் கொண்டிருப்பதிலும் சரி, மற்றவர்களிடம் கம்பீரமாக நடந்துகொள்வதிலும் சரி இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் இவர் என்ட்ரி ஆனாலும் ரசிகர்களின் மனதில் நிலைத்துநிற்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் - வீடியோ


பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமியை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக சமீபகாலமாக இணையத்தில் பல செய்திகள் பரவி வந்தது, தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் நடிகை ஐஸ்வர்யா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தற்போது இவர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'கட்ட குஸ்தி' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் டிசம்பர் 2ம் தேதியன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'கட்ட குஸ்தி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்துகொண்டவர், தான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக கூறப்படும் வதந்திகள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவரை பேசுகையில், "பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு பிறகு நான் எனது சம்பள பேக்கேஜை உயர்த்தி இருப்பதாக கூறப்படும் செய்திகள் உண்மையல்ல, ஒரு படம் என்பது முழுக்க முழுக்க அந்த இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகுவது தான், அதில் தனக்கு என்ன பங்களிப்பு இருக்கிறதோ அதை மட்டும் தான் கொடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங்! செம ஹேப்பியில் நாக சைதன்யா - அப்செட்டில் சமந்தா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ