வலிமை படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக படத்துக்கு ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்ஹ்டின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் தற்போது பைக் ரைட் செய்துவருகிறார். இதற்காக அவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காதல் கொண்டேன் வைப் ஏற்றும் நானே வருவேன் டீசர்; யூ-ட்யூபில் டிரெண்டிங்!


இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், போர் நினைவிடங்கள், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று அஜித் மரியாதை செலுத்திவருகிறார்.



இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள் இரண்டு பேர், "உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்" என்று கறுகின்றனர். உடனடியாக அஜித், "தேடிட்டு இருக்கிங்களா... நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா" என்று சிரித்தபடி கேட்கிறார்.


 



அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | ராஜ்கமல் நிறுவனம் விரைவில் 100வது படத்தை தயாரிக்க வேண்டும்: கமல்ஹாசனின் ஆசை


மேலும் படிக்க | “நீங்கள் இன்னொரு தாய்”... நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் உருக்கமான வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ