25 Years of Aval Varuvala: ஹாலிவுட் படத்தின் காபியா அவள் வருவாளா? 25 ஆண்டுகளை கடந்த படம் குறித்த அறியாத தகவல்!
நடிகர் அஜித்குமார் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் அடித்த அவள் வருவாளா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித்குமார், தனது சினிமா வாழ்க்கையில் வளர்ந்து வந்த காலம் அது. காதல் காேட்டை, ஆசை, காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல ஹிட் படங்களை நடித்து எல்லா இயக்குநர்களின் அடுத்த ஹீரோ பட்டியலில் இடத்தை பிடித்து விட்டார் அஜித். 1998ஆம் ஆண்டு வரிசையாக வெளிவந்த அஜித் படங்களில் ஒன்று, அவள் வருவாளா. இந்த படம், சரியாக 25 வருடங்களுக்கு முன்பு, இதே தேதியில் வெளியாகி தியேட்டர்களில் நெடுநாட்கள் ஓடி வசூலிலும் சக்கை போடு போட்டது.
25 ஆண்டுகளை கடந்த அவள் வருவாளா:
தமிழில் தற்போதைய பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கபூர், 90’ஸ்களின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர். அவர் இயக்கிய படம்தான் அவள் வருவாளா. இப்படத்தில், காதல்-காமெடி, செண்டிமன்ட், சண்டை, த்ரில்லர் காட்சிகள் என பல அம்சங்கள் அடங்கி இருக்கும். இந்த படத்தில் முதல் பாதிக்கு பிறகு, முழுக்க முழுக்க கதாநாயகியான சிம்ரனை சுற்றிதான் கதை சுழலும். சொல்லப்பாேனால் இரண்டாம் பாதியில் அவ்வளவாக ஹீரோவுக்கு வேலையே இருக்காது. அப்படிப்பட்ட படத்திலும் அப்போதே துணிந்து நடித்தவர் அஜித்.
கதையின் புதுமை:
ஹீரோக்களை மட்டுமே மையக்கருவாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த அந்த காலத்தில் முதன் முறையாக ஒரு சைக்கோ கணவனின் கையில் மாட்டிய மங்கை ஒருத்தி குறித்த கதை, அந்த கால ரசிகர்களுக்கு புதுமை காட்டியது. மேலும், மாமியார்-மருமகள் என்றால் சண்டை சச்சரவுதான் இருக்கும் என்ற ஒரே மாதிரியான டெம்ப்ளேட் கதையை விடுத்து, இந்த படத்தில் அந்த உறவுக்கான புது அர்தத்தை கொடுத்திருந்தனர். அஜித், சாதுவான நாயகனாக நடித்து விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றார். பப்ளு, சைக்கோ தனத்திலும் வில்லத்தனத்திலும் அப்ளாஸ் அள்ளினார். இவர்களையெல்லாம் விட அதிக பாராட்டுக்கு உரியவர், பழம்பெரும் நடிகை சுஜாதா. க்ளைமேக்ஸில் தன் மகனை தானே விஷம் வைத்து கொல்லும் காட்சியிலும், தன் மருமகளை மகளாக ஏற்று அவர் நன்றாக இருக்க வேண்டும் என ஒவ்வாெரு முடிவையும் எடுக்கும் காட்சியிலும் காண்பவரை மெய்சிலிரக்க வைத்தார் அவர்.
ஹாலிவுட் படத்தின் காபி?
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருந்த சைகோ த்ரில்லர் படம், ஸ்லீப்பிங் வித் தி எனிமி. இதில், சைக்கோ கணவனின் பிடியில் இருந்து தப்பிக்க தான் செத்தது போல் செட் செய்து விட்டு தப்பி ஓடும் பெண் குறித்த கதை இது. இந்த படத்தையும் மலையாளத்தில் இதே போன்ற பாணியில் வெளியான மஞ்சு விரிச்ச பூக்கள் என்ற கதையையும் மையமாக வைத்து தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படம், பெள்ளி. இப்படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக வெளிவந்ததுதான் அவள் வருவாளா. அந்த மொழியிலும் இப்படம் சக்கை போடு போட்டது.
பாடல்கள் படு ஹிட்
பிரபல இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் அவள் வருவாளா படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சரியான ஹிட் அடித்தன. குறிப்பாக பழநிபாரதியின் வரிகளில் “சேலையில வீடு கட்டவா சேந்து வசிக்க..” பாடல் கிளுகிளுப்பான ஆட்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் யூ டியூபில் இப்பாடல் பல மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இது தவிர, ‘சிக்கி முக்கி, ருக்கு ருக்கு’ ஆகிய பாடல்கள் இன்றளவும் பலரது ப்ளே லிஸ்டில் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ