தமிழ் சினிமாவிற்குள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நுழைந்து இன்றுவரை புகழின் உச்சத்தில் இருக்கும் இரு துருவங்கள் தான் விஜய் மற்றும் அஜித்.  இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் ஆண், பெண் என பாலின வேறுபாடின்றி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்த இருவரின் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து அவர்களது ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாவது வரை சமூக வலைதளங்களில் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் போன்றவற்றை பகிர்ந்துகொண்டு உற்சாகத்தில் இருப்பார்கள்.  அதேபோல அன்றிலிருந்து இன்றுவரை இவர்களின் ரசிகர்களின் ஒருவரையொருவர் தாக்கி பேசி சண்டையிடுவதை நிறுத்தியபாடில்லை.  தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் 2023ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்த பிரபல இயக்குனர்!


இந்நிலையில், அதே தேதியில் ஹெச்,வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'துணிவு' படமும் வெளியாகவுள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அஜித்தின் துணிவு படம் பொங்கல் தினத்தன்று வெளியாகப்போவதாக நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.  ஏற்கனவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் 'வாரிசு' மற்றும் 'துணிவு' படத்தை தாக்கி மாறி மாறி போஸ்டர்கள் அடித்து சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அஜித்தின் துணிவு படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு முன்னர் திட்டமிட்டிருந்தது, ஆனால் இன்னும் படத்தின் பணிகள் நிறைவடையாததால் அந்த திட்டத்தை படக்குழு மாற்றி இருக்கிறது.



விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாவது இது முதல்முறையல்ல.  இதற்கு முன்னர்  2002-ல் ப்ரண்ட்ஸ் - தீனா, 2003-ல் திருமலை - ஆஞ்சநேயா, 2007-ல் போக்கிரி - ஆழ்வார், 2014-ல் ஜில்லா - வீரம் போன்ற படங்கள் ஒரே தினங்களில் திரையரங்குகளில் வெளியாகி திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றிய நிலையில் தற்போது வாரிசு - துணிவு ஒரே நாளில் வெளியாகப்போவதாக கூறப்படுகிறது, இந்த செய்தி உறுதியாகும்பட்சத்தில் பொங்கல் பண்டிகையை சேர்த்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், அஜித் படம் பொங்கலுக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு ஜனவரி 26ம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அடுத்ததற்கு துணிவுடன் ரெடியான அஜித் - வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ