அஜித்குமார் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் காமெடியன்களாக நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?


பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. வேற மாரி மற்றும் விக்னேஷ் சிவன் எழுத்தில் உருவான ’அம்மா’ பாடல் ஆகிய இரண்டு ஹிட் அடித்தன. இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோ விரைவில் வெளியாகும் என்ற தகவல் பரவியது. அதுதொடர்பான புகைப்படங்களும் திங்கட்கிழமை மாலை முதல் இணையத்தில் உலாவின. இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்துபோலவே வலிமை படத்தின் ஸ்டண்ட் மேங்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


3.03 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஒவ்வொரு பிரேமும் தெறிக்கிறது. படத்திற்கு பூஜை போட்டது முதல் அஜித் பைக் ரேஸில் ஈடுபடும் காட்சிகள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. ஒரு காட்சியில் பைக் ரேஸில் ஈடுபடும் அஜித், எதிர்பாரதவிதமாக கீழே விழுகிறார். அப்போது, மகாத்மா காந்தியின் "நாம் தடுக்கி தரையில் விழலாம், ஆனால் மீண்டு எழுவோம். போர்க்களத்தில் இருந்து ஓடாமல் இருத்தலே நமது வெற்றி" என்ற வார்த்தைகள் திரையில் ஓடும்போது, கீழே விழுந்த அஜித் அவராகவே எழுந்து செல்கிறார். 


ALSO READ | சூர்யாவுடன் நேரடியாக மோதவுள்ள பிரபல நடிகர்


இந்தக் காட்சி, பார்க்கும் ஒவ்வொருவரையும் மெய்சிலர்க்க வைக்கிறது. மேக்கிங் வீடியோ வெளியான முதலே வலிமை மேக்கிங் வீடியோ என்ற ஹேஸ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR