ஆன்-லைனில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டும் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
கொரோனா முழு அடைப்பு திறந்த பின்னர் மக்கள் முன்பு போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கொரோனா குறித்து பல்வேறு யூகங்கள் செய்யப்படுகின்றன.
கொரோனா முழு அடைப்பு திறந்த பின்னர் மக்கள் முன்பு போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கொரோனா குறித்து பல்வேறு யூகங்கள் செய்யப்படுகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, பல நட்சத்திரங்கள் தங்கள் படத்தை OTT தளத்திலும் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானின் குலாபோ சீதாபோ ஆன்-லைனில் வெளியடப்பட்டது.
முன்னதாக குலாபோ சீதாபோ டிரெய்லர் வெளியிடப்பட்ட போது இத்திரைப்படம் OTT தளமான அமேசாம் பிரைமில் வெளியிடப்படும் என மக்களுக்கு தெரியப்படுத்தியது. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது கிலாடி குமார் அதாவது அக்ஷய் குமாரின் படம் லக்ஷ்மி பாம்ப்-ம் OTT தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
ஆனால் இது அமேசான் ப்ரைமுக்கு பதிலாக ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியின் படி, முதலில் படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இதற்கு உடன்படவில்லை, ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைவரும் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
லட்சுமி பாம்ப் படத்தைப் பற்றி பேசுகையில், கபீர் சிங் புகழ் கியாரா அத்வானி அக்ஷய் குமாருடன் நடித்துள்ளார். கொரோனா அச்சத்தால் படம் முழுவதுமாக படமாக்கப்படவில்லை, சிறிது வேலைகள் எஞ்சியுள்ளன. மேலும் படத்துடன் தொடர்புடையவர்கள் முழு அடைப்பு முடிவடையும் நாளுக்காக காத்திருக்கிறார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் படி இந்த படம் OTT தளத்தில் வெளியிட சுமார் ரூ.125 கோடி பெற்றுள்ளது.
முன்னதாக, படம் மே 22 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது., ஆனால் தொற்றுநோய் காரணமாக அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம் : சரிதா சேகர்