நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகுமார் இயக்கிய இப்படம் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் - இந்தியா ரிலீஸாக வெளியானது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்படும் படங்கள் மட்டுமே பான் இந்தியா அளவில் கவனம் பெற்றுவந்த நிலையில் பலரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்தது புஷ்பாவின் வசூல்.


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் இப்படம் இந்திய அளவிலான கவனத்தைப் பெறக் காரணமாக அமைந்தது எனலாம். பாமரர்கள் முதல் பிரபலங்கள் வரை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என இப்படத்தின் பாடல்களை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டுவந்தனர்.


                                                        


புஷ்பா முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இதன் அடுத்த பாகத்தை எடுக்கப் படக்குழு தயாரானது. இதனிடையே அண்மையில் பான் - இந்தியா ரிலீஸாக வெளியான தென்னிந்தியப் படங்களான கே.ஜி.எஃப்- 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகியவை தொழில்நுட்பரீதியாகவும் ஆக்‌ஷன் காட்சிகளாலும் மிரட்டியிருந்ததால் புஷ்பா- 2 படத்தையும் சற்று அதுபோல எடுக்கலாம் எனப் படக்குழு கருதியதாம்.


மேலும் படிக்க | ஷங்கரின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானாம்- கதையும் ‘லீக்’ ஆயிடுச்சு!


                                                    


இந்தத் திடீர் முடிவால் கதையில் சில மாற்றங்கள் செய்யவேண்டி இருந்ததால் இதன் படப்பிடிப்பும்கூட தள்ளிப்போடப்பட்டதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் இப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா- 2 படத்தின் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டதாம்.


கதை ரெடியான நிலையில் இதற்கான திரைக்கதையை இயக்குநர் சுகுமார் உருவாக்கிவருகிறாராம். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ‘வசூல் மன்னன்’ என மீண்டும் நிரூபித்த விஜய்! - தொடர்ந்து 5ஆவது முறையாக ‘அந்த’ சாதனை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR