தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். 


இந்நிலையில் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னதாக அமிதாப் பச்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போட்டுள்ளார். என்ன என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று விபரீதம் நடக்கப்போகிறது என்பது போன்று படபடப்பாக இருக்கிறது என்று அமிதாப் டிவிட் செய்திருந்தார். 


அமிதாப் பதிவிட்ட டிவிட்டின் 20 நிமிடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஸ்ரீதேவி மரணமடைந்ததை அறிந்த டுவிட்டர் வாசிகள், அமிதாப் டுவிட்டரைப் பார்த்து வியந்துள்ளனர்.