செந்திலை கடத்திய உமா-அமுதாவுக்கு ஷாக்! அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய அப்டேட்..!
Amudhavum Annalakshmiyum Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சீரியல்களுள் ஒன்று, அமுதாவும் அன்னலட்சுமியும். ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் இத்தொடர், குடும்ப கதையை பின்னணியாக கொண்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை என்னென்ன தெரியுமா?
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வடிவேலு நகையை அடகு வைத்திருந்த விஷயம் தெரிய வந்து அதனை மீட்டெடுத்த நிலையில் பழனியின் சதி வேலை தெரிய வந்து அவன் கைதாகினான். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அன்னலட்சுமி கதிரேசன் போட்டோ முன் நின்று நம்ம குடும்பத்துக்கு வர இருந்த அவமானத்தை நம்ம மருமக தடுத்து நிறுத்திட்டா என வேண்ட அமுதா அன்னலட்சுமியிடம் இனிமே நீங்க வேலைக்கு போக கூடாது என சொல்கிறாள். அடுத்ததாக அமுதாவுக்கு டாக்டர் போன் செய்து நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார், செந்தில் ரிப்போர்ட்டை பார்த்தவுடன் ஒரு சின்ன ஆபரேஷன் செய்தால் கண் பார்வை திரும்ப வந்து விடும் எனவே உடனே கிளம்பி வருவமாறு சொல்கிறார்.
மேலும் படிக்க | ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..’ அழகு நாயகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்..!
அமுதா செந்திலுடன் கிளம்பி செல்ல அன்னலட்சுமி போகும் போது கோயிலுக்கு சென்று விட்டு செல்லுமாறு சொல்கிறாள். இங்கே ஹாஸ்பிட்டலில் மாயாவிடம், நர்ஸ் ஒருவர் செந்திலுக்கு ஆபரேஷன் நடக்கும் விஷயத்தை சொல்ல மாயா என் வாழ்க்கை எனக்கு கிடைக்க போகுது என சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம் வடிவேல் குமரேசனிடம் செந்திலுக்கு கண் பார்வை வந்துவிடும், இன்னைக்கு மத்தியானம் ஆபரேஷன் என சொல்கிறான்.
உமா என் புருஷன் ஜெயில்ல இருந்து வர்றதுக்குள்ள செந்திலுக்கு கண் பார்வை போகனும், புருஷன் கூட ஆஸ்பிட்டலுக்கு அமுதா போனா தான கண் பார்வை கிடைக்கும். மாமா அந்த செந்தில் பயலை தூக்கிருங்க என சொல்ல, குமரேசன் ரவுடிகளை ஏற்பாடு செய்கிறான். அமுதாவும் செந்திலும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்ய ரவுடிகள் கோவிலுக்குள் வந்து செந்திலை தூக்கி செல்கின்றனர். அமுதா கண்களை மூடி வேண்டிக் கொண்டிருக்கிறாள். டாக்டர் அமுதாவுக்கு போன் செய்து சீக்கிரம் வருவமாறு சொல்வது செந்திலை தூக்கி போவதை பார்த்த பூக்கடை சிறுமி விஷயத்தை அமுதாவிடம் வந்து சொல்கிறாள்.
ஆட்டோவில் ரவுடிகள் செந்திலை கடத்தி செல்ல, செந்தில் தன் கையிலிருந்த குங்கும பாக்கெட்டை பிரித்து ரோட்டில் கொட்டியபடி செல்ல அமுதா ரோட்டில் செந்திலை தேடி ஓடி வருகிறாள்.. அன்னலட்சுமி அமுதாவுக்கு போன் செய்து ஹாஸ்பிட்டல் போயிட்டீங்களா என கேக்க அமுதா பதில் சொல்ல முடியாமல் பதறுகிறாள் .
அதனை தொடர்ந்து அமுதா அன்னலட்சுமியிடம் செந்திலை கடத்தி விட்டார்கள் என விஷயத்தை சொல்ல அன்னம் அடைகிறாள். அமுதா ரோட்டில் குங்குமம் கொட்டி இருப்பதை பார்த்து அதனை பாலோ செய்து செல்கிறாள். மாயா ஹாஸ்பிட்டலில் பதட்டத்துடன் இருக்க அன்னலட்சுமி கதிரேசனை நினைத்து வேண்டுகிறாள்.
ரவுடிகள் செந்திலை குடோனில் அடைத்து வைக்கின்றனர். ஹாஸ்பிட்டலில் செந்திலுக்காக டாக்டர் காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ