ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் கண்மணி மனோகரன் ராஜஸ்ரீ மற்றும் அருண் பத்மநாபன் நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கரஸ் அனைவரிடம் இந்த பள்ளிக் கூடம் குமரேசன் மற்றும் கதிரேசன் குடும்பத்திற்கு பதியப்பட்டது.அவங்க தாத்தாவோட உயில்படி யாரு வாத்தியாராக ஆகுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த பள்ளிக் கூடம் சொந்தம் என அறிவிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து உமா எழுந்து அவளது சர்டிபிகேட்டை கொடுக்க கரஸ் உமா இந்த பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக சேர்த்து கொள்ளப்படுவதாக அறிவிப்பது மட்டுமில்லாமல் குமரேசனிடம் இந்த பள்ளிக் கூடத்தை நிர்வகிக்கிற பொறுப்பை ஒப்படைப்பதாக சொல்கிறார்.இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் அமுதா அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறாள். 


மேலும் படிக்க | மண்டபத்தில் சத்தியை காயப்படுத்தும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!


ஆனால் உங்க சைடுல யாரும் வாத்தியார் இல்லை அதனால நீங்க சொல்றதை கேக்க முடியாது என சொல்லி நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.பின்னர் பேப்பரில் கையெழுத்து போடப் போகும் சமயம் பேப்பர் பறக்கிறது.ஒரு வண்டி வந்து நிற்க அதிலிருந்து செல்வராஜ் இறங்குகிறான்.


பின்னால் இருந்து கருப்பு கலர் சப்பல், வேஷ்டி சட்டையும், கழுத்தில் ருத்திராட்சம் மற்றும் கண்ணாடியுடன் வந்து இறங்க பேப்பர் பறந்து வந்து கொண்டிருக்கிறது, உமாவும் பழனியும் அதை எடுக்க போக அது அந்த நபரின் காலில் விழுகிறது.


இருவரும் நிமிர்ந்து பார்க்க அது செந்தில் என தெரிய வர இருவரும் ஷாக்காகின்றனர்.அன்னம் அவனை பார்த்து அழ செல்வராஜ் அய்யா பேரு செந்திலு, ரெண்டு வருஷம் சென்னைல பி.எட் படிச்சிட்டு வந்திருக்காரு என சொல்கிறான். அடுத்து அமுதா எங்க சைடும் வாத்தியார் இருக்காரு என சொல்லி மாஸ் காட்ட செந்தில் ஆசிரியராக பொறுப்பேற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ