எமி ஜாக்சன்-ஸ்ரேயா கலந்து கொண்ட தென்னிந்திய அழகிப்போட்டி!
நடிகைகள் எமி ஜாக்சன், ஸ்ரியா சரண் கலந்து கொண்ட தென்னிந்திய அழகிப்போட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி, தோல் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்றது.
ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விண்டோ எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனர்கள் கோபிநாத் ரவி மற்றும் சரவணன் ஆகியோர் ஏ சி டி சி ஸ்டுடியோ நிறுவனர் ஹேம்நாத் உடன் இணைந்து கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா 2024 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த போட்டியில் பங்கு பெற பதிவு செய்திருந்த நிலையில், 51 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அழகு கலை, ஒய்யார நடை, மற்றும் கேள்வி பதில் சுற்றுகளில் பங்கேற்ற இவர்களில் அமால் ஷாஜகான் மிஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்றார்.
மேலும் படிக்க | ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…
ஜாக்லின் சோபியா மிஸஸ் கோல்டன் பேஸ் ஆப் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். நிவேதா அருண்பிரசாத் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சென்னை பட்டத்தையும், மேகா ராஜீவ் மிஸஸ் கோல்டன் ஃபேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தையும், வர்ஷினி வெங்கட், மிஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் எமி ஜாக்சன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கிரீடம் அணிவித்தனர். இவர்களுடன் இயக்குனர் ஏ எல் விஜய் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியின் பிராண்ட் அம்பாசிடர் பார்வதி நாயர் ஆகியோரும் தலைமை விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற இவர்கள் அனைவரும் இணைந்து ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்த உள்ளனர்.
மேலும் படிக்க | சிங்கிள் சிங்கமாக உலா வரும் அனுஷ்கா! முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ