மர்ம நபர்கள் செய்த துணிவான சம்பவம் - பட டிக்கெட்டுகள் திருட்டு
வேலூரில் அடையாளம் தெரியாத நபர்கள் துணிவு படத்தின் டிக்கெட்டுகளை திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ஏகப்பட்டோர் ரசிகர்களாக இருக்கின்றனர். இரண்டு பேரின் பட வியாபாரமும் பல நூறு கோடிகளில் நடப்பவை. எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்தும், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய்யும் நடித்திருக்கின்றனர்.இரண்டு படங்களில் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இரண்டு படங்களும் நாளை ரிலீஸாகின்றன. சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளம், போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது. பொதுவாக விஜய்-அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும் 4 மணிக்கும் நடைபெறும். அப்படி இந்தப் படங்களுக்கும் ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவிருக்கின்றன.
அதற்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வேலையில், ஆற்காடு சாலையில் உள்ள வேலூர் மாவட்ட அஜித்குமார் ரசிகர்கள் நற்பணி இயக்க அலுவலகத்தில் இருந்து துணிவு பட டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளன.
அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ. 16,000 பணம் மற்றும் ரசிகர் மன்றத்துக்காக வழங்கப்பட்ட துணிவு படத்தின் சுமார் ரூ. 30,000 மதிப்பிலான 150 டிக்கெட்டுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | அண்ணா இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா - தமன் உருக்கம்
முன்னதாக, துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களுக்கு பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, 13,14,15,16 ஆகிய தேதிகளில் அதிகாலை சிறப்புகாட்சிகள் (4 மற்றும் 5 மணி காட்சிகள்) ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பார்க்கிங் மற்றும் டிக்கெட் கட்டணம் அதிகப்படியாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ