சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!! நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாத்த படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியானது. ரஜினி ரசிகர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்துயுள்ள படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் ‘அண்ணாத்த’ முக்கிய இடத்தில் உள்ளது.



தமிழ் சினிமா ரசிகர்களின் தீபாவளி விருந்தாக ரசிகர்களை மகிழ்விக்க வரவுள்ள சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் ட்ரைலர், தீபாவளிக்கு முன் வெடிக்கும் சரவெடியாய் வெளிவந்துள்ளது.  ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, ஏற்கனவே இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.


முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' (Annaatthe) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது. இந்த படத்தில் ரஜினி ஒரு கிராமத் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் இந்த வேடத்தில் அவரைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.


ALSO READ: "அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல் வெளியானது - தரமான பாடல் என புகழாரம்


இந்த நிலையில், இந்த மாதம் 4 ஆம் தேதி அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் (Annaatthe First Single) வெளியானது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பாடல் அவர்களது எதிர்பார்ப்பை வீணாக்கவில்லை. இதைத் தொடர்ந்து மற்ற பாடல்களும் வெளியாயின.


தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா (Nayanthara), கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது.


ALSO READ: அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR