`அண்ணாத்த` படத்தின் மருதாணி பாடல் வெளியானது - தரமான பாடல் என புகழாரம்
இன்று இந்த படத்தில் இடம்பெற்ற `மருதாணி செவப்பு செவப்பு` என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துள்ள "அண்ணாத்த" படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனையடுத்து அந்த படத்தைக் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். தற்போது "அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா (Nayanthara), கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று அண்ணாத்த (Annaatthe) படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. "மருதாணி" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று இந்த படத்தில் இடம்பெற்ற "மருதாணி செவப்பு செவப்பு" என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. டி.இமான் (D Imman) இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை அமுதவன் என்பவர் எழுதியுள்ளார்.
ALSO READ | 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தார் எஸ்பிபி: சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி
இந்த படத்தின் ஒளிப்பதிவு வெற்றி, எடிட்டிங் ஆண்டனி எல்.ரூபன், கலை இயக்குனராக சதீஷ் மற்றும் மிலன் பெர்னாண்டஸ் பணியாற்றி உள்ளனர்.
இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழும் கிடைத்துள்ளது. திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் சான்றிதழ் (CBFC) பெற்றுள்ளனர். இது சென்சார் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிபிகேஷனால் (CBFC) U/A- சான்றிதழுடன் வெளிவருகிறது. "அண்ணாத்த" படம் நவம்பர் 4, 2021 அன்று உலகளவில் வெளியிடப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 2019 இல் தொடங்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 2021 இல் நிறைவடைந்தது.
ALSO READ | அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR