தனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை.
இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
மூன்று பாகமாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28-ஆம் நாள் வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் இப்படமானது வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடமாக உருவாகி வரும் வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக நடித்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் எனக்கு மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே பேர் சொல்லும் விதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.