சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பு!!
நடிகை சன்னி லியோன் புத்தாண்டுக்கு பெங்களூர் வருகிறார்.
நடிகை சன்னி லியோன் வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவு பெங்களூர் வருகிறார். இவரின் வருகையை தொடர்ந்து "சன்னி நைட் இன் பெங்களூர்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்சிக்கு கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை பற்றி கன்னட அமைப்பின் தலைவர் ஹரீஷ் மற்றும் பொதுச்செயலாளர் சையது மனோஜ் கூறுகையில்; நடிகை சன்னி லியோன் யார் என்று அனைவருக்கும் தெரியும். இவரால் எண்களின் கலச்சாரம் கெடுவது ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை அதிகம். இந்த டிக்கெட் பயோடெக் நிறுவனங்களுக்கு மட்டும் தான் வழங்குகின்றனர். இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் கூறினார்.
இப்போது இவர்களுக்கு நடிகை சன்னி லியோன் பெங்களூர் வருவது பிரட்சினையா?. இல்லை டிக்கெட் விலை அதிகமாக உள்ளது பிரட்சினையா?.