தொடர்ந்து லீக்காகும் புகைப்படங்கள்... இந்த முறை ராஷ்மிகா - விஜய்... அதிர்ச்சியில் படக்குழு
விஜய் 66 படப்பிடிப்பு தளத்திலிருந்து தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்களால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் போனதோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் ஆளானது. இதனால் விஜய் தான் நடிக்கும் அடுத்தப் படத்தை ஹிட் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
அவரது 66ஆவது படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். நிச்சயம் இதில் வித்தியாசமான விஜய்யை காணலாம் என வம்சி வாக்குறுதி அளித்தாலும் பீஸ்ட் போல் படம் சொதப்பிவிடக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷ்யாம் விஜய்க்கு சகோதரராக நடிக்கிறார் எனவும், விஜய் இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் முடிந்தது அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இதற்கிடையே ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதேபோல் தற்போது சென்னையில் நடந்து வரும் ஷூட்டிங் புகைப்படமும் வெளியாகியுள்ளது. கடந்த முறை வெளியான புகைப்படத்தில் விஜய் மட்டும் இருந்தார். இந்த முறை வெளியான புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறார்.
தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாவதால் இதனை படக்குழு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென விஜய் ரசிகர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்த சூழலில் தற்போது மீண்டும் புகைப்படம் வெளியாகியிருப்பது ரசிகர்களை மட்டுமின்றி படக்குழுவினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
மேலும் படிக்க | இவ்வளவு கோடியை கொட்டி கொடுத்து சந்திரமுகி டைட்டில் உரிமையை வாங்கியதா லைகா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR