பிரபல தென்னிந்திய நடிகையான அனுஷ்கா ஷெட்டியை தற்போது திரையில் காணமுடியாவிட்டாலும் இன்றளவும் அவருக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்புக்கு மட்டும் குறைவில்லை.  பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் அனுஷ்கா.  நமக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படங்கள் சில நமக்கு எவ்வளவு தான் ஃபேவரைட்டாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த படங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துபோகக்கூடும்.  ஆனால் அனுஷ்கா நடித்திருந்த அருந்ததி படம் ஒரு சிறந்த கூஸ்பம்பஸாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றளவும் பெரும்பாலான ரசிகர்கள் அந்த படத்தை பார்க்கும்போதும் முதல் தடவை பார்ப்பது போன்றதொரு ஆர்வத்தில் தான் பார்க்கின்றனர்.  இவரின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்திய மற்றொரு படம் பாகுபலி.  அனுஷ்கா தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.  இவ்வளவு பிரபலமான இந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும்போது இவர் சின்னத்திரை நடிகை ஒருவருக்கு ரசிகையாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஷ்காவிற்கு பிடித்த அந்த சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி, விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 'ஈரமான ரோஜாவே' சீரியலின் மூலம் கதாநாயகியாக நடித்தார், தற்போது இவர் 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரில் நடித்து வருகிறார்.  



மேலும் படிக்க | ஜெயிலர் படத்தில் நான் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் ஹீரோயினின் பளிச் பதில்


இந்நிலையில் அனுஷ்கா தனது ரசிகை என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் பவித்ரா அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.  அந்த பதிவில், 'இந்த சோர்வான நாளில் புத்துணர்ச்சி தரும் விதமாக பாகுபலி நடிகை தேவசேனா, வசீகரமான நடிகை அனுஷ்கா ஷெட்டியிடமியிருந்து எனக்கு அழைப்பு வந்தது.  நான் இதை பிராங்க் என்று தான் நினைத்தேன், இந்த தருணம் எனக்கு கனவு போல இருந்தது.  தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்காக எனக்கு கிடைத்த பாராட்டு இது, அவர் மனப்பூர்வமாக பாராட்டினார், இப்போது எனக்கு அவர் மீது மரியாதை அதிகரித்திருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.


 



மேலும் பவித்ரா தெரிவிக்கையில், 'அனுஷ்கா எங்களின் தொடரை தினமும் தவறாமல் பார்ப்பாராம், தற்போது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டு எப்போது என் இதயத்தில் இருக்கும்.  இதை நான் எழுதும்போது மேகத்தில் மிதப்பது போல உணர்கிறேன்.  உங்கள் அழைப்பால்  எனது சோர்வான நாள் மேஜிக் செய்தது போல நொடிப்பொழுதில் உற்சாகமாகிவிட்டது, நன்றி' என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | ஷூட்டிங்கே முடியல அதற்குள் கோடிகளை அள்ளிய வாரிசு?...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ