நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தமிழ் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர், அருந்ததீ போன்ற பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கு வயது 40. இவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் அடிக்கடி செய்தியாகும். மேலும், இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை இருவரும் உறுதிசெய்யவில்லை. 


மேலும் படிக்க | எதுக்கு தேடுறீங்க நான் என்ன கொலைகாரனா?... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்


அனுஷ்கா - பிரபாஸ் ஆகியோர் இணைந்து பில்லா (தெலுங்கு), மிர்சி, பாகுபலி ஆகிய திரைப்படங்களில் கதை நாயகர்களாக நடித்துள்ளனர். திரையில் மட்டுமின்றி திரைக்கு வெளியேவும் இவர்களின் காம்போ நன்றாக இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. தொடர்ந்து, பல பட விழாக்களிலும் இருவரும் ஒன்றாக தோன்றியுள்ளனர். இதனால், அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. அது மட்டுமின்றி, அவர்கள் தீவிரமாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. 


இந்நிலையில், கடந்த வாரம் பிரபாஸின் பெரியாப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜூ மரணமடைந்தார். அதற்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் சேர்ந்து அங்கு வந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. இதன்மூலம், அவர்கள் காதலித்து வருவது உறுதியானதாக கூறப்பட்டது. 


இருவரும் 40 வயதை கடந்து விட்ட நிலையில், விரைவில் தங்களின் திருமண செய்தியை வெளியே அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.  


மேலும் படிக்க | ஒரே நாளில் தமிழில் இவ்வளவு படங்கள் ரிலீசா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ