அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பாகமதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படம் ‘பாகமதி’ குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். 


இந்நிலையில் ‘பாகமதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கையில் ஆணி வைத்து அடிக்கப்பட்டது போலவும், மறுகையில் ரத்தம் சொட்டும் சுத்தியிலும் இடம்பெற்றுள்ளது.