இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’. மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் எங்கே இருக்கிறது ? உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.  


மேலும் படிக்க | Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..


இதில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு டீனேஜ் பெண் போல தான் பாடி இருக்கிறேன். கவிஞர் ருத்ரா இந்த பாடலை எழுதியுள்ளார். தோசை சுடுகின்ற வேகத்தில் பாடல் எழுதி விடுவார். ரம்யா இந்த ஆல்பத்தின் டிராக்கை பாடியுள்ளார். எமில் மிகத் திறமையானவர். அனிருத், ரஹ்மான் போன்று வரக்கூடியவர். எதனாலோ தெரியவில்லை அவரது திறமை வெளியே தெரியாமல் அமுங்கிக் கிடக்கிறது. அனேகமாக இதுபோன்ற சுயாதீன ஆல்பங்களில் அவரது பெயர் பெரிதாக வரும் என எதிர்பார்க்கிறேன்.. கனடாவில் அவர் பெரிய ஆளாக இருப்பது போல இங்கே இந்தியாவிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். மணி வி வி நாயர் இதை இயக்கியுள்ளார்.


இந்த நிகழ்ச்சிக்கு நான் கூப்பிட்டதுமே உடனே ஓடோடி வந்த பாப் ஷாலினிக்கு நன்றி. அவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பாகவே நிறைய பாப் பாடல்கள் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நான்கு வரிகள் தான் முதலில் பாடினேன். அதைக் கேட்டு விட்டு ஏ.ஆர் ரஹ்மானிடம் இந்த குரல் யாருடையது முழு பாடலையும் பாட வையுங்கள் என்று கூறிவிட்டார். அதுவே எனக்கு ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது போன்றது. மணிரத்னம் படங்களில் நான் பாடிவிட்டால் என் பாடலை தூக்கக்கூடாது என விட்டுவிடுவார். அதன்பிறகு மாதேஷ் என்னை நம்பி ஒரு முழு பாடலை கொடுத்து ரசிகர்களுக்கு இன்னும் என்னை அடையாளம் காட்டினார்” என்றார். நடிகை சுகாசினி பேசும்போது, “இது வித்தியாசமான படைப்புகள் உருவாகும் ஒரு காலகட்டம் என்று சொல்லலாம். முன்பு சினிமா, நாடகம் மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்று நிறைய தளங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது தான் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல கலைஞர்களை கண்டுபிடிக்க முடிகிறது. இந்த சின்ன பையன் சாய் அபயங்கர் திப்பு-ஹரிணியின் மகன் என்பது எனக்கு தெரியவே தெரியாது. என்னுடைய படத்திற்காக ஹரிணியை அழைத்து வந்து நிலா காய்கிறது பாடலை பாட வைத்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. 


இந்தப் பாடலின் இசை எங்கே போய் சேர வேண்டுமோ அதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. சில புத்திசாலித்தனமான இயக்குனர்கள் என்னிடம் கேட்கும்போது, என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை அந்த சமயத்தில் வெளியான பிரபலமான பாடல் அந்த சூழ்நிலைக்கு எது சரியாக பொருந்துமோ அதை வைத்து தான் அந்த நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்று கூறினேன். சங்கீதம் இல்லை என்றால் என்ன வாழ்க்கை இருக்கிறது ? சங்கீதம் தான் எல்லாமே. 1997ல் நான் சுகம் இல்லாமல் இருந்தபோது அடிக்கடி என் வீட்டிற்கு வந்து நான் குணமடைய வேண்டும் என்பதற்காக நான் படுத்திருந்த இடத்தில் ஏ.ஆர் ரெஹைனாவின் அம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு செல்வார்கள். அந்த தாயின் ஆசிர்வாதத்துடன் ஏ.ஆர் ரெஹைனாவின் எதிர்காலம் இன்னும் பிரகாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று கூறினார் 


பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது, “நான் முதன்முதலில் பண்ணிய ஆல்பம் ரீங்காரம். அதற்கடுத்து ழா என்கிற பாடல் பண்ணி இருந்தேன். சுயாதீன ஆல்பங்கள் என்பது எப்போதுமே எங்களுக்கு விருப்பமானது. இந்த மாத்திக்கலாம் மாலை பாடலில் என்ன புதுமை என்று கேட்டால் புதுமை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வேலை செய்துவிட்டு களைத்துப் போய் வரும் தொழிலாளிகளுக்கு இது போன்ற பாடலை பார்க்கும்போது அவர்களது மூட் அப்படியே மாறிவிடும். அவர்களுக்கு அடுத்த நாள் உற்சாகம் தருவதே இதுபோன்ற பாட்டுக்கள் தான். நான் இப்படி படபடவென பேசுவதற்கு காரணம் கொஞ்ச நாள் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துள்ளேன். அதன்பிறகு சின்மயி மூலமாக ஆர்ஜேவாக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்து இப்படி மாறி விட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த பாடலை அனுப்பி வைத்தேன். அவர்தான் பெரிதாக பேச மாட்டாரே. ஒரு தம்ஸ் அப் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தார்.


இது இந்த புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஆல்பம். உலக அளவில் பார்க்கும்போது இசையமைப்பாளர்கள் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இங்கே நாம் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறோம். படத்திலும் பாடல்களை குறைத்து விட்டால் இசையமைப்பாளர்கள் எங்கே செல்வார்கள் ? அதனால் தான் நாங்களே பாடல் காட்சிகளில் தோன்ற ஆரம்பித்து விட்டோம். அதற்காக ஹீரோயினாக நடிப்பேன் என்று நினைத்து விட வேண்டாம். என் பாட்டுக்கு மட்டும் தான் நான் ஹீரோயின். எனக்கு என்ன பொருந்துமோ அதைத்தான் பண்ணுகிறேன். சில பேரை தூங்க வைப்பதற்காக தான் பாட்டு என்றாலும் தூங்காமல் இருக்கும் சிலருக்காக இது போன்ற பாட்டுக்கள் தேவை. ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தான் இந்த பாடலை படமாக்கினோம்.  


இந்த பாடலை ரிலீஸ் வீடியோக்களாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன அதில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு  பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சாலிகிராமம் அப்புசாலி தெருவில் புதிதாக கரீமா டைனிங் ஸ்பாட் என்கிற பிரியாணி கடை துவங்கியுள்ளேன். அருமையான பிரியாணி அங்கே கிடைக்கும். ஆயிரம் பிரியாணி கடைகள் இருந்தாலும் என்னுடைய டேஸ்ட்டுக்கு என் வீட்டிற்கு பிடித்த மாதிரி அது இருக்கும். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் அம்மா அவர்களை வரவேற்று உபசரிப்பார். அவரது பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல். அவரிடம் இருந்து நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என சொல்லலாம். அவரது ஞாபகார்த்தமாகத்தான் இந்த கடையை துவக்கி உள்ளேன்” என்றார்.


மேலும் படிக்க | OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ