உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசை அமைக்கும் AR ரஹ்மான்?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு A.R.ரஹ்மான் இசைமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு சில படங்கள் மூலமே தமிழ் திரையுலகில் அதிகம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகும் நிலையில் தற்போது இப்படம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிக்க போவதாக கூறப்படுகிறது. பஹத் பாசில் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் A.R.ரஹ்மான் இசைமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேனீ ஈஸ்வர் பணியாற்றியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தையும், தனுஷை வைத்து ஒரு படத்தையும் இயக்கி முடித்த பின் இப்படத்தின் பணியை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படம் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது, இப்படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்டிகிள்-15'ன் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக இவர் நடிப்பில் 'கண்ணை நம்பாதே' என்கிற படம் இந்தாண்டு ரிலீசாக உள்ளது.
ALSO READ | ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது; இவர்தான் மாப்பிள்ளை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR