பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள்


இந்நிலையில், உதகையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆர். வேலுசாமி அவர்கள், பத்திரிக்கையாளர்களையும், எங்கள் குடும்பத்தையும் அவதூறாக பேசியதாக 8 நடிகர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நடிகர்களை ஆஜராக நீதிமன்றம் கோரியது.


ஆனால் 8 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காரணத்தால்நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 நடிகர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பேருக்கு நீலகிரி குற்றாவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.