பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்; அண்ணத்தே நடிகை கதறல்

மாமனாரும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக துணை நடிகை காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்.
பாலியல் தொல்லை கொடுத்து கொலை தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் மானியார் மீது பிரபல துணை நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் தற்போது இந்த விவகாரம் சமூக ஊடகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த துணை நடிகை ரஜினியின் அண்ணாத்தே, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், தேவராட்டம், துப்பரிவாளன் போன்ற பல பிரபல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பேரன்பு உள்ளிட்ட சில சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணண் நகர் பகுதியை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ரன.
மேலும் படிக்க | அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!
இந்த நிலையில் தற்போது இந்த துணை நடிகை தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி அந்த வீடியோவில் அவர், தன்னுடைய மாமனார் மீது போலீசில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புகார் அளித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது பேசிய அவர்.,
நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார், மாமியார் ஆகியோர் என்னை மதிப்பதில்லை. பலமுறை என் மாமனார், நீ நடிகை தானே என்று கேட்டு என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்று செய்துள்ளார். இதுகுறித்து நான் பலமுறை போலீஸார் இடம் முறையிட்டும் இருக்கிறேன். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சில தினங்களுக்கு முன்பு என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பின் நான் அவரை தடுத்தேன். மேலும் என்னை கொலைவெறி உடன் தாக்குதல் நடத்தி இருந்தார். இதனால் நான் பலத்த காயமடைந்தேன்.
தற்போது மீண்டும் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நடிகை கொடுத்த புகாரின் பேரில் அவரது மாமனார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | தளபதி - சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லியிருக்கும் ஹரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR