Ayalan Director R. Ravikumar Blessed With Baby Boy : அயலான் பட இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015ஆம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ரவிக்குமார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். மியா, ஆர்யா, கருணாகரன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ரவிக்குமார் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகள் மாற்று குடும்ப ரசிகர்களுக்கு இடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 


மேலும் படிக்க | Joshua Imai Pol Kaka: ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!


பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவானது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'அயலான்' படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது மட்டும் இன்றி, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 


இந்நிலையில் தற்போது இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். இதற்காக தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நறுமுகை என்கிற மகள் ஒருவர் உள்ளார்.