பிக்பாஸில் அட்வைஸ் கொடுத்த கமலுக்கு இப்போ ஒருமையில் பதில் அளித்தாரா அசீம்?
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தில் கமல் ஹாசனை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும், டைட்டில் வென்ற அசீம் மீதான விமர்சனங்கள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அவர் பேசும் ஒவ்வொரு கருத்தும் சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது. இப்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்து ஒன்றும் கமல்ஹாசனை மறைமுகமாக சாடியிருப்பதாகவும் ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.
அசீம் டைட்டில் வின்னர்
பிக்பாஸ் சீசன் 6 பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் விக்ரமன் மற்றும் அசீம், ஷிவின் ஆகியோர் இருந்தனர். பெரும்பாலானோர் விக்ரமன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அசீம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
மேலும் படிக்க | அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது, கொந்தளித்த நெட்டிசன்கள்
பெண்களிடம் அவர் பேசிய விதம், சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்திய விதமெல்லாம் விமர்சனத்துக்குள்ளானது. அப்படி இருந்தும் அசீமுக்கு ஏன் பிக்பாஸ் ரெட் கார்டு கொடுக்கவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் முடிவில் அசீமுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்து அலங்கரிக்கப்பட்டது.
கமல்ஹாசன் மீது விமர்சனம்
இது குறித்து கருத்து தெரிவித்த பிக்பாஸ் ரசிகர்கள், விக்ரமன் வெற்றியாளராக இருக்க வேண்டிய இடத்தில் அசீமுக்கு டைட்டில் கொடுத்து தவறான முன்னுதாரணத்தை காண்பித்திருப்பதாக நெறியாளர் கமல்ஹாசனையும் விமர்சித்தனர். அதேநேரத்தில் ஒரு போட்டியில் எப்படி விளையாட வேண்டும்? என்பதை அசீம் உணர்த்தியிருப்பதாக பதிலுக்கு அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
அசீம் விமர்சனம்
நிகழ்ச்சிப் பிறகு பல்வேறு சேனல்களில் பேட்டியளித்து வரும் அசீமிடம் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவருடைய நடத்தை அவரது மகனுக்கே தவறான முன்னதாரணமாக இருக்காதா? என்றும் கேள்வி எழுப்பினர். இதே கருத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீமிடமும் கமல்ஹாசன் முன்வைத்தார். அதற்கு இப்போது பதில் அளித்திருக்கும் அசீம், " பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு என கேட்குறாங்க. ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாள்கள் இருக்கின்றன.
அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என நறுக்கென பதில் அளித்தார். இந்த பதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அட்வைஸ் செய்த கமலுக்கும் தான் என ரசிகர்கள் கொளுத்திபோட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ’டாடா’ கவினுக்கு ஹீரோயின் அபர்ணா தாஸின் எமோஷ்னல் கடிதம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ