பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 


இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இவற்றில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து வரும் ‘பாகுபலி-2’ படத்தை திரையிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று பாகுபலி படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று பாகுபலி-2 படம் திரையிடப்படவிருக்கிறது.