நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி திரையுலக பிரபலங்கள், அரசியல் வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி (Corona Vaccination) போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் (Parthiban) சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் எடுத்துக் கொண்டார். 


ALSO READ | விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை, தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்!


இந்த தடுப்பூசியால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வாமை காரணமாக அவரது கண், காது, முகம் எல்லாம் வீங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் (TN Assembly Election 2021) வாக்களிக்க முடியவில்லை என்று அவர்  ட்வீட் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:


வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில் என பார்த்திபன் மேலும் தெரிவித்துள்ளார். 


 



 



 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR