வணங்கான் பர்ஸ்ட்லுக் போஸ்டர்: பாலா இயயாகத்தில் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வணங்கான் திரைப்படம்:
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாலா. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் சேர்ந்து தன்னுடைய பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குனர் பாலாவே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக (Actor Arun Vijay) ரோஷினி என்கிற இளம் நடிகை நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் (Vanangaan) படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 


மேலும் படிக்க | ஷாருக்கான் நடிக்க இருந்த கதையில் சிவகார்த்திகேயன்? இயக்குனர் யார் தெரியுமா?


வணங்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு:
இந்நிலையில் தற்போது சற்று முன் "வணங்கான்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் (Vanangaan First Look Poster) போஸ்டர் வெளியாகியுள்ளது, இந்த போஸ்டர் பார்ப்பதற்கே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. அதன்படி போஸ்டரில் நடிகர் அருண் விஜய், ஒரு கையில் பெரியார் சிலையையும், மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கட்டாயம் பாலா மிகப்பெரிய சம்பவத்தை செய்ய உள்ளார் என்று கூறி வருகின்றது.



சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்:
முன்னதாக வணங்கான் திரைப்படத்தில் சூர்யா (Actor Suriya), கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருந்தது, மேலும் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும் கடந்தாண்டு கன்னியாகுமரியில் நடைபெற்றது. ஆனால், படம் அடுத்தக்கட்டம் நகராமல் இருந்த நிலையில், இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சூர்யா. சூர்யா விலகியதை அடுத்து 2டி நிறுவனமும் இப்படத்தில் இருந்து விலகியது. இருப்பினும் இக்கதையை கைவிட விரும்பாத இயக்குனர் பாலா, அதனை வேறு ஹீரோவை வைத்து எடுக்க முடிவெடுத்த நிலையில், அருண்விஜய்யை வைத்து வணங்கான் படத்தை மீண்டும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



வணங்கான் ரிலீஸ் எப்போது?
இதற்கிடையில் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் வணங்கான் திரைப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த திரைப் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது படக்கழு.


மேலும் படிக்க | புஷ்பா முதல் கஜினி வரை! மகேஷ் பாபு ரிஜெக்ட் பண்ண படங்கள் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ