`பாஸ்கர் ஒரு ராஸ்கல்` டீசர் வெளியீடு!!
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி நடித்து வெளிவந்த “பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தின் ரீமேக்காகும். அரவிந்த் சாமி, அமலா பால் தவிர நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகாவும் நடித்து உள்ளார். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னதாக இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.