என்னது பீஸ்ட் 200 கோடி வசூலா?
பீஸ்ட் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யை வைத்து நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் ஹிட் கொடுத்தது போல் விஜய்க்கும் நெல்சன் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து படத்துக்கு சென்றனர்.
ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விஜய் என்ற ஸ்டார் நடிகரை மட்டும் நம்பி கதையிலும், திரைக்கதையிலும் சொதப்பிவிட்டார் என நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி விஜய்யை வைத்து படம் எடுக்க எவ்வளவோ இயக்குநர்கள் காத்திருக்க நெல்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீண்டித்துவிட்டார் எனவும் விமர்சிக்கின்றனர்.
மேலும் படிக்க | ஒரே ஆண்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 3 படங்கள்!
படம் விமர்சன ரீதியாக சோதனைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் பீஸ்ட் திரையிடப்படும் திரையரங்குகளில் யாருமே இல்லாதது போன்ற வீடியோக்களும் உலாவுகின்றன. இதனால் பீஸ்ட் படம் ஹிட்டா இல்லை ஃப்ளாப்பா என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாள்களில் பீஸ்ட் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் ஆகிய படங்கள் 200 கோடி ரூபாயை வசூல் செய்தது என சொல்லப்பட்ட சூழலில் தற்போது விஜய்யின் பீஸ்ட்டும் 200 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், அதுதொடர்பான ஹேஷ் டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாக்கினர்.
இருப்பினும், படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சமந்தாவை தொடர்ந்து ஒரே பாடலில் கொடிகட்டி பறக்கப்போகும் பூஜா ஹெக்டே?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR