பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. பீஸ்ட் படம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெட்டே, செல்வராகவன், ரெடின் கிங்க்லே போன்றோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லர் எப்போது? தேதியை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்
ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்கில் பீஸ்ட் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு போட்டியாக ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது. தற்போது பீஸ்ட் படத்திலிருந்து தினமும் புதிய புகைப்படங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வீரராகவன் என்ற பெயரில் ஒரு Raw ஆபீஸராக விஜய் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் கூறுகையில், " பீஸ்ட் முழுக்க முழுக்க விஜய் சாருக்கான கதை. மறுபடியும் சொல்றேன், ஒருவேளை அவர் நடிக்கலைன்னா இந்த கதையை அப்படியே ஓரமா தூக்கி வெச்சுருப்பேனே தவிர வேறு ஆக்டரை வைச்சு எடுத்திருக்கவே மாட் டேன். இதை விஜய் சார்கிட்டயே சொல்லியிருக்கேன். விஜய் சார் படத்துல ஒரு RAW ஆபீசர். அவர் சந்திக்கிற இக் கட்டான சூழல், அதைச் சுற்றி நகர்கிற கதைதான் 'பீஸ்ட்'. இப் போதைக்கு இது மட்டும்தான் சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரைலர்க்காக காத்துகொண்டு உள்ளனர்.
மேலும் படிக்க | ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR