விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ஆனால் ரசிகர்களில் சிலர் படம் எதிர்பார்த்தப்படி இல்லை எனவும், விஜய்யை நெல்சன் செய்துவிட்டார் எனவும் கூறிவருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக டார்க் காமெடிக்கு பெயர் போனவர் நெல்சன் என்ற பேச்சு இருக்கையில், பீஸ்ட் படத்தில் அதற்கான அறிகுறியே இல்லை என்கின்றனர் ரசிகர்களில் சிலர். 



அதுமட்டுமின்றி மூன்று மாதங்களில் கதை எழுதுவது பெரிதில்லை. அந்த கதை அனைவரும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டுமெனவும் நெல்சன் திலீப்குமாரை கலாய்த்துவருகின்றனர் நெட்டிசன்கள். 


மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உருவ கேலி: நியாயமா நெல்சன்?


அதேசமயம் ஒரு தரப்பினர் படம் பக்கா கமர்ஷியலாக இருக்கிறது. விஜய் ஒன் மேன் ஷோவாக படம் முழுக்க திகழ்கிறார். குடும்பங்கள் நிச்சயம் பீஸ்ட்டை கொண்டாடும் என கூறுகின்றனர். இதனால் பீஸ்ட் படத்தின் உண்மையான நிலவரம் என்னவென்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.



இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான செம்பியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பீஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது.இதற்கு முன் இருந்த அனைத்து சாதனைகளையும் பீஸ்ட் நொறுக்கியுள்ளது. உலகளவில் வசூலும் சிறப்பாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.


 



அவரது இந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சிதான் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.


மேலும் படிக்க | மூனு மாசத்துல கதை எழுதுனா இப்படித்தான்... நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR