ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பாக்கியத்தை வாசல் தாண்டி வெளியே வர சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது சௌந்தரபாண்டி இன்னும் ஒரு வாரத்துல உன் பொண்ணு கல்யாணம் இருக்கு என்று சொல்ல பரணி என்னை பத்தியெல்லாம் நீ கவலைப்படாத என்று சொல்ல பாக்கியம் முதல் படியை தாண்டி வந்து ஷாக் கொடுக்கிறார். அடுத்ததாக இன்னொரு படியில் காலை எடுத்து வச்ச உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று சௌந்தரபாண்டி மிரட்ட பாக்கியம் அதையும் தாண்டி ஷாக் கொடுக்கிறாள். 


அடுத்ததாக மூணாவது படியை தாண்டினால் நான் செத்தாலும் இந்த வீட்டு வாசற்படியை மிதிக்க கூடாது என்று சொல்ல பாக்கியம் அதையும் தாண்ட சௌந்தரபாண்டி ஆவேசப்பட்டு அடிக்க பாய ஷண்முகம் அரிவாளை இடையில் வைத்து சௌந்தரபாண்டியை தடுக்கிறான். வாசற்படியை தாண்டுற வரைக்கும் தான் உன் பொண்டாட்டி, இப்போ என்னுடைய அத்தை என்று சொல்லி பாக்கியத்தை அழைத்து கொண்டு கிளம்ப முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் உச்சகட்ட அதிர்ச்சி அடைகின்றனர். 


இவ்வளவு நாளா அம்மா உங்களுக்கு பயந்து போய் இந்த வீட்ல இருக்கல, எங்களுக்காக இந்தாங்க.. எங்க அம்மாவை நீங்க வேண்டாம்னு சொல்லல அவங்க நீங்க வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டாங்க என்று பரணி பதிலடி கொடுக்கிறாள். அத்தையை வீட்டிற்கு அழைத்து வந்த ஷண்முகம் டாக்டரை வரவைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறான். பிறகு அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே சென்று உனக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக தான் அமைதியாக இருப்பதாக பீல் செய்கிறான். 


அடுத்ததாக வைகுண்டம் ஆட்டுக்கறி, ஆட்டு ரத்தம், ஈரல், தலைக்கறி, உடல் என அனைத்தும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வர காவலர்கள் என இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிட்டு வரீங்க என்று கேட்க எல்லாம் என் தங்கச்சிக்காக தான் என்று வாங்கி வந்ததை லிஸ்ட் போட அவர்கள் வாயடைத்து நிற்கின்றனர். வீட்டிற்கு வந்து இசக்கியை அத்தனையும் சமைக்க சொல்ல இவ்வளவையும் சாப்பிடறது யாரு என்று பாக்கியம் கேட்கிறாள். 


கல்யாணத்துக்கு முன்னாடி வரை உன்னை உட்கார வைத்து உனக்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்த அதுக்கப்புறம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கல, இப்போ கிடைச்சிருக்கு சும்மா விடுவேனா என தனது பாசத்தை வெளிப்படுத்துகிறார் வைகுண்டம். அப்படியே மறுபக்கம் சௌந்தரபாண்டியும் முத்துபாண்டியும் பசியில் தவிக்கின்றனர். 


பரணியிடம் சாப்பாட்டை எடுத்து வை என்று சொல்ல அவள் வாங்கி வந்திருக்கீங்களா என்று கேட்க ஏன் நீ சமைக்கலயா என்று கேட்க பரணி எனக்கு தான் சமைக்கவே தெரியாதே என்று ஷாக் கொடுக்கிறாள். சௌந்தரபாண்டி உன் ஆத்தாகாரி உனக்கு என்ன தான் சொல்லி கொடுத்தா என்று கோபத்தோடு கேட்க சுடுதண்ணீ வைக்க சொல்லி தந்தாங்க, வச்சி எடுத்து வரவா என்று நக்கல் அடிக்கிறாள். 


பிறகு சௌந்தரபாண்டி நைசாக நழுவும் சனியனை பிடித்து நல்ல ஓட்டல்ல போய் சாப்பாடு வாங்கிட்டு வாடா என்று ஆர்டர் போடுகிறார், அதோடு நான் ஓட்டலயே இனி சாப்பிடுகிறேன், யாருக்கும் தலை வணங்க மாட்டேன் என பந்தா காட்ட பரணி இனிமே தான் உங்க டப்பா டேன்ஸ் ஆட போகுது சௌந்தரபாண்டி என பரணி கவுண்ட்டர் கொடுக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அண்ணா சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ