பாவனா விவகாரம்: காவ்யா மாதவன் தலைமறைவா? போலீஸ் விசாரணை

கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவார என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் தலைமறைவாகி விட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தற்போது பாவனா கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனும் சிக்கி இருக்கிறார்.
நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் காவ்யா மாதவனும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டதாக தகவல் ஊடங்களில் வெளியாகி உள்ளது. அவரை போலீசார் தீவிரமா தேடி வருகிறார்கள்.