போஜ்பூரி படங்களில் தனக்கென ஓரு தனி அடையாளம் பெற்ற நடிகை மனிஷா ராய் சாலை விபத்தில் பலியானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

45 வயதான இவர் தனது மேட்டார் சைக்கிலில், உத்திரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் சித்துன்னியா கிராமத்துப் பயணித்துக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்துக்குள்ளானார்.


முதற்கட்ட விசாரணையில், மனிஷா அப்பகுதி அருகில் சினிமா படப்பிடிப்பிற்கு தனது உதவியாளர் சஞ்ஜீவ் மிஷ்ராவுடன் சென்றதாக தெரிகிறது. விபத்தினை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அப்பகுதியில் இருந்து தப்பித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சம்பந்தமுடைய ஓட்டுநரை விரைவில் கண்டுபிடிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.