AK61: அஜித்துடன் நடிக்கப்போகும் பிக்பாஸ் பிரபலம்
நடிகர் அஜித் - போனி கபூர் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 திரைப்படத்தில் லிப்ட் நாயகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா பாக்ஸ் ஆஃபிஸிலும் ஹிட் அடித்தது. தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்து முந்தைய பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகளை நொறுக்கியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், அஜித் ஒருவருக்காகவே படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது.
மேலும் படிக்க | வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
இந்த வெற்றிப் பிறகு மீண்டும் வலிமை கூட்டணி சேர உள்ளது. இதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனிக்கபூர் அண்மையில் வெளியிட்டார். அதாவது, வெண்தாடி மற்றும் கருப்பு நிற சட்டையில் இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு, ஏகே 61-க்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தார். புகைப்படம் நெகடிவ்வாக இருப்பதால், மங்காத்தா போல் நெகடிவ் கேரக்டராக இருக்குமோ? என்றெல்லாம் யூகங்களை நெட்டிசன்கள் கிளப்புயுள்ளனர்.
அஜித்தின் ஏகே 61 படத்தை வலிமை படத்தை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் மீண்டும் இயக்க உள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பூர்வாங்க பணிகள் அனைத்தும் முடிவடைந்திருப்பதால், விரைவில் சூட்டிங் தொடங்க ஏகே 61 குழு முடிவெடுத்துள்ளது. சென்னை அண்ணா சாலையைப் போன்று பிரம்மாண்டமான செட் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், லேட்டஸ்டாக ஒரு தகவல் உலாவத் தொடங்கியிருக்கிறது. அதாவது, பிக்பாஸ் கவின் அஜித்தின் ஏகே 61 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் லீட் ரோலில் நடித்த ‘லிப்ட்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித்துடன் நடிக்க இருக்கிறார்.
மேலும் படிக்க | வலிமை முதல் நாள் கலெக்ஷன் - அண்ணாத்த சாதனையை முறியடித்ததா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR