Aamir Khan Rescued From Chennai Floods: சென்னை மிக்ஜாக் புயல் வெள்ளப்பாதிப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷாலும் காரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிக்கியிருந்த நிலையில், தற்போது அவர் போட்டுள்ள ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷ்ணு விஷால் போட்டுள்ள பதிவில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணியாற்றுகிறது. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என தெரிவித்திருந்தார். 


அவர் வெளியிட்ட புகைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும் இருந்ததுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் அமீர்கான் சென்னையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | Chennai Flood: விளம்பரம் தேடிய விஷால்.. பதம் பார்த்த நெட்டிசன்கள்


முன்னதாக, அமீர்கானின் தாயார் ஜீனத் ஹூசனுக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரை பார்த்துகொள்ளவும், பக்கபலமாக இருக்கவும் அமீர்கான் சென்னைக்கு வர உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அந்த வகையில் அவர் சென்னைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


இருப்பினும், அமீர்கான் காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் குடியிருந்தாரா அல்லது அவர் அங்கு வேறெதும் குடியிருப்பில் இருந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. ஏனென்றால், சில மணிநேரத்திற்கு முன் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்த பதிவில் இதுகுறித்து அவர் தெரிவிக்கவில்லை. 


முன்பு விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில்,"எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து காரப்பாக்கத்தில் நீர்மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்துள்ளேன், மின்சாரம் இல்லை வைஃபை இல்லை. போன் சிக்னல் இல்லை, ஒன்றுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார். 


தற்போது அமீர்கான், விஷ்ணு விஷால், அவரின் மனைவி ஜுவாலா கட்டா, அவரது வளர்ப்பு நாய் மற்றும் பொதுமக்கள் சிலரும் பேரிடர் மீட்புப் படையினரால் டப்பர் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | விளம்பரம் தேடாதீங்க முதலமைச்சரே.... நடவடிக்கை எடுங்க - வானதி சீனிவாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ