#BiggBoss-ல் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீரில் மனைவி...!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாய் களமிறங்கும் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீருடன் அவரது மனைவி..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாய் களமிறங்கும் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீருடன் அவரது மனைவி..!
ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் நிகழ்சி பிக் பாஸ். இந்த நிகழ்சிகள் பற்றிய பல சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றது. இதையடுத்து, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஹிந்தி மொழியில் உள்ள பிக் பாஸ் சீசன் 12-ல் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த் கலந்து கொள்வாதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியில் சல்மான் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 12ஐ எட்டியுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தான் கடைசிப் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் ஸ்ரீசாந்த். இதற்கான அறிவிப்பை கலர்ஸ் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடும்போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவராக இருந்தார் ஸ்ரீசாந்த். இதனால் பல்வேறு சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்வது குறித்து தெரிவித்துள்ள அவர், ``பிக் பாஸ் உண்மையானது.
இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 2011 ஆம் ஆண்டே நான் கலந்துகொள்ளவேண்டியது. ஆனால் முடியவில்லை. இருப்பினும் நிகழ்ச்சி நடத்தும் சேனல் உடன் தொடர்பில் இருந்தேன். அதனால் இப்போது மீண்டும் கலந்துகொண்டேன். கிரிக்கெட் அல்லாத வாழ்க்கையில் நான் இப்போது செய்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" எனக் கூறியுள்ளார்.