பிக்பாஸ் புகழ்' 'ஓவியா'' வெளியிட்ட புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

களவாணி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா, இவர் தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து, இவருக்கு எராளமான பட வாய்ப்புகள் தேடிவர தற்போது, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’, ’90ml’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


இதையடுத்து, அண்மையில் வெளிவந்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் மீண்டும் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பங்கு பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆரவுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 


முன்னதாக, பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ஆரவிற்கு இடையில் பல கிசுகிசுக்கள் பரவி வந்தது. இந்நிலையில், இவர் ஆரவுடன் இருக்கும் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.