Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் உள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்படும். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து வரும் காட்சிகளை பார்த்து வருகிறோம்.


ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்


சென்ற வாரம் இசைவாணிக்கு கூடுதல் சக்தி கிடைத்தது. இந்த வாரம் நிரூப் அந்த சக்தியை கையில் எடுத்து போட்டியாளர்களை ஆட்டிப்படைத்து வருகிறார். 


இதற்கிடையில் நேற்று சினிமா சினிமா என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருக்கிறனர். இதில் அக்ஷராவுக்கு படையப்பா நீலாம்பரி கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கேரக்டரில் அவர் நடித்ததை இன்று இமான் அண்ணாச்சி விமர்சனம் செய்யும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன. 


அக்ஷராவின் நடிப்பின் மீது எனக்கு ஈடுபாடு வரவில்லை என்றும் நீலாம்பரி கேரக்டர் குறித்து அவருக்கு தெரியவில்லையா என்று எனக்கு புரியவில்லை என்றும் இமான் அண்ணாச்சி கூறுகிறார். இதற்கு பதில் அளித்த அக்ஷரா உங்கள் வயதுக்கு நான் மரியாதை கொடுத்தேன். உங்களை சொடக்கு போட்டு கூப்பிட எனக்கு மனம் வரவில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.


ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR