BB 7 Tamil Contestant Hospitalized: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் 7 (Bigg Boss 7 Tamil) போட்டியில், பங்கேற்பாளராக இருந்த ஒரு பிரபலத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? இதோ முழு விவரம்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:


சர்ச்சைகளையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பிரித்தே வைக்க முடியாது. அந்த அளவிற்கு, இதில் இடம் பெறும் போட்டியாளர்களின் கருத்து ரசிகர்களை சண்டை போட வைக்கும். கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்தியில் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக பல சீசன்களை எட்டியுள்ளது. தமிழில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டில்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மொழியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல, அந்தந்த மொழிகளில் அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தாெகுத்து வழங்கி வருகின்றனர். 


கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் (Bigg Boss Season 7 Tamil) தமிழில் தொடங்கப்பட்டது. இதில், தமிழ் சின்னத்திரை நடிகர்களும், பெரிய திரையில் துணை நடிகர்களாக வலம் வந்தவர்களும், சில டிஜிட்டல் முகங்களும் பங்கேற்பாளர்களாக இடம் பெற்றனர். 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த போட்டியில் தற்போது இறுதிப்போட்டிக்கு செல்ல இருப்பது யார் என்று தேர்வாகி விட்டது. பிக்பாஸில் ஆரம்ப போட்டியாளர்களாக (BB 7 Tamil Finalists) உள்ள மாயா, மணிச்சந்திரா, விஷ்ணு ஆகியோரும், வைல்டு கார்டு மூலம் பாேட்டிக்குள் நுழைந்த அர்ச்சனா, விஜய், தினேஷ் ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 


மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் 7 போட்டியாளர்..


பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே அந்த இல்லத்தில் தன்னால் இருக்க முடியாது என கூறிவிட்டு உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறியவர், பவா செல்லதுரை. கதை சொல்லியான இவர், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள இளம் தலைமுறையினரிடையே நல்ல நட்பு கொண்டிருந்தார். ஆனால் இவர் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. இவர் பேசிய விஷயங்களுக்கான விளக்கங்களை அவர் பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 



மருத்துவமனையில் அனுமதி? 


பவா செல்லதுரை, நெஞ்சு வலி காரணமாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தற்போது அவர், மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்?


பிக்பாஸ் போட்டியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற கேள்வி, மக்கள் மனதில் நெடு நாட்களாகவே நிலவி வருகிறது. ஏனென்றால், இதில் இருக்கும் யாருமே பிக்பாஸ் டைட்டிலை பெறுவதற்கு தகுதியற்றவர் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் இருக்கும் மாயா, மணிச்சந்திரா, விஷ்ணு ஆகிய மூவரில் மாயாதான் பலமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இவர்களை அடுத்து, வைல்டு கார்டு மூலம் உள் நுழைந்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர், அர்ச்சனா. பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசி, மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அனைத்து கேமராக்களின் கவனமும் தன் மீது இருக்கும்படி பார்த்துக்கொண்டார். ஆனால், இது ஒரு கட்டத்தில் மக்களுக்கு ‘இவர் உண்மையாகவே இப்படித்தானா அல்லது நடிக்கிறாரா?’ என்ற சந்தேகத்தை கிளப்பியது. இவரும் டைட்டிலை வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவரைப்போலவே வைல்டு கார்டு மூலம் போட்டிக்குள் நுழைந்தவர், தினேஷ். இவர் பேசிய சில கருத்துகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்து விடும்.  


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா..! வெயிட் பார்டிதான் போல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ