பிக் பாஸ் வீட்டிற்குள் ஜேவிகா, விசித்ரா இடையே காரசார மோதல்.. பதிலடி கொடுத்த வனிதா
Vanitha Vijayakumar Reaction: தனது மகள் ஜேவிகாவிற்கு ஆதரவாகவும் விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வனிதா பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
விசித்ராவிற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்: தனது மகள் ஜேவிகாவிற்கு ஆதரவாகவும் விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய் டிவி:
பிக்பாஸ் (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இதில் கூல் சுரேஷ் (Cool Suresh), பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாமினேஷன்:
இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷனில், ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.
மேலும் படிக்க | துணிவு to லியோ-24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை கடந்த தென்னிந்திய படங்கள்..!
ஜோவிகா Vs விசித்ரா:
இதற்கிடையில், நேற்று ஜோவிகாவிற்கு நடிகை விசித்திராவிற்கும் படிப்பு விஷயத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது "விசித்திரா நடிகை வனிதாவின் மகளான ஜோதிகாவிடம் நீ தமிழில் எழுதி காட்டு என்று சொல்ல, அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்?" வாக்குவாதம் காரசாரமாக போனது.
வனிதாவின் பதிலடி:
இந்த நிலையில் நேற்றைய தினம் விசித்திரா பேசி இருந்ததிற்கு ஜோவிகாவின் அம்மாவான வனிதா தன்னுடைய X தளத்தில் ஜோவிகாவின் அப்பா எனக்கு இதை பதிவேற்றுமாறு அனுப்பினார் என்று சில வார்த்தைகளை பதிவிட்டு இருக்கிறார். அதில் "பெற்றோர் பிள்ளைகளுக்கு எது சிறந்தது என தெரிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்" எனக் கூறி தன்னுடைய மகள் வாசித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் விசித்ரா பேசியது சரி என்றும் கூறி வருகின்றனர்.
நெட்டிசன்களின் கருத்து:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த ப்ரமோவும் ஜோவிகா மற்றும் விசித்ரா ஆகியோருக்குள் ஏற்பட்ட படிப்பு குறித்த விவாதம் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நேற்று இரவில் இருந்து #Jovika என்ற ஹேஷ்டேக்கும் #Vichithra என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. பலர் ஜோவிகாவின் கருத்திற்கு ஆதரவாக பேச, ஒரு சிலர் “சினிமா துறையில், லைம் லைட்டில் வளர்பவர்களுக்கு படிப்பு அவசியம் இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு படிப்புதான் முக்கியம்” என்ற கருத்தும் நிலவி வருகிறது. மேலும், ஜோவிகா ஒருமையில் பேசியதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | தலைவர் 170 படத்துக்கு வன்னியர்கள் எதிர்ப்பு! அப்படி என்ன தான் சிக்கல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ