Bigg Boss Tamil 4 - பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோ வீடியோவில், கால் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை ஆரியிடம் கேட்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆரி திணறும் காட்சிகள் உள்ளது. கால் ஆரம்பித்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால்  பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டிற்கு வெளியே’ என்று ஆரம்பிக்கும் பாலாஜி (Balaji Murugadoss), ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று சொல்வீர்கள். ஆனால் ஆரி (AARI) நீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடவில்லையா? என்று முதல் கேள்வியை பாலாஜி வைக்கிறார். 


ALSO READ | சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ


அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவள் நம்பவே முடியாது’ என்று பாலாஜி கூறுகிறார்.



இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரி தத்தளிக்கும் காட்சி புரோமோவில் தென்படுகிறது. இருப்பினும் இன்றைய முழு நிகழ்ச்சியில் ஆரி இதற்கு பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 


ALSO READ | பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR