Bigg Boss 4: Eliminate பண்ண housemates அதிகமா போட்ட வோட்டு யாருக்கு தெரியுமா?
Bigg Boss தமிழ் சீசன் 4-ன் முதல் nomination process-ல் அதிக வோட்டுகள் வாங்கி வெளியேற்றப்பட முன்னிலையில் இருப்பது ஷிவானியும், சனமுமா? இன்னும் யார் யாரது பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ளன?
பிரபல தமிழ் ரியாலிட்டி ஷோ Bigg Boss 4-ன் இரண்டாவது வாரம் தொடங்கிவிட்டது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் செயல்முறையுடன் (Elimination Process) இரண்டாம் வாரம் தொடங்குகிறது. இரண்டாவது வாரத்திற்குள் அடி எடுத்து வைக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் (Bigg Boss Contestants), ஏற்கனவே ஷார்ட்லிஸ்ட் செய்யப்படட் எட்டு போட்டியாளர்களில், தலா இருவரை, வீட்டை விட்டு வெளியேற நாமினேட் செய்ய வேண்டும்.
போன வாரம் Bigg Boss போட்டியாளர்களுக்கு ஒரு task-ஐ அளித்திருந்தார். அனைவரும் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான தருணங்கள், முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த task.
இதன் மூலம் ஒவ்வொருவரைப் பற்றியும் மற்றவர் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், திரையில் காணும் பிரபலங்களின் பின்னால் இருக்கும் உண்மையான முகங்கள் என்ன, அவர்கள் அனுபவித்த சவால்கள் என்னென்ன என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் task-ன் நோக்கம்.
ALSO READ: ‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!
அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிறகு, இவர்களில் யார் வீட்டிற்குள் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை அனைவரும் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட, நாமினேஷனுக்காக, போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி எட்டு போட்டியாளர்கள் சனம், கேப்ரியெல்லா, ரேகா, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித் கலிக், ரம்யா பாண்டியன் மற்றும் சிவானி நாராயணன் ஆகியோர் ஆவர்.
இன்றைய எபிசோடிற்கான சமீபத்திய ப்ரோமொவில், இன்றைய எலிமினேஷன் பிராசசில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கான அதிக வாக்குகள் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோருக்குக் கிடைத்ததாகக் காட்டுகிறது.
ஆரி, சுரேஷ், சம்யுக்தா, ரம்யா ஆகியோர் சனம் பெயரை நாமினேஷனில் எடுத்துள்ளதாகவும், அனிதா சம்பத், சோம், சம்யுக்தா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் சிவானியின் பெயரை நாமினேஷனில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
Bigg Boss தமிழ் சீசன் 4-ன் முதல் nomination process-ல் அதிக வோட்டுகள் வாங்கி வெளியேற்றப்பட முன்னிலையில் இருப்பது ஷிவானியும், சனமுமா? இன்னும் யார் யாரது பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ளன? எத்தனை பேர் நாமினேட் செய்யப்படுவார்கள்? இதில் ஏதாவது ட்விஸ்ட் உள்ளதா?
அத்தனை கேள்விகளுக்கும் இன்றைய Bigg Boss எபிசோட் விடையாக அமையும்.
ALSO READ: வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழ் 4 இல் நுழையும் இந்த பிரபல VJ தொகுப்பாளர்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR